Home Featured கலையுலகம் இன்ஸ்டாகிராம் பதிவுகள்: யோகாவினால் இளமை குறையாத ஷில்பா ஷெட்டி!

இன்ஸ்டாகிராம் பதிவுகள்: யோகாவினால் இளமை குறையாத ஷில்பா ஷெட்டி!

1103
0
SHARE
Ad

Shilpa13

ஷில்பா ஷெட்டி! தமிழ் இரசிகர்கள் இன்னும் மறந்திருக்க முடியாத ஒரு பெயர். கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வட்டாரத்துக்காரர் என்றாலும், இந்திப் படங்களில் முன்னணி கதாநாயகியாகப் பல படங்களில் கொடி நாட்டினார்.

வட நாட்டு நடிகை என்றாலும், பிரபு தேவாவுடன் அவர் ‘மிஸ்டர் ரோமியோ’ தமிழ்ப் படத்தில் போட்ட கவர்ச்சி ஆட்டம், குஷி படத்தில் விஜய்யுடன் ‘மேக்கரினா’ பாடலுக்குப் போட்ட குத்தாட்டம், ஆகியவற்றால் தனது அழகு முகத்தையும், கட்டுடல் பிம்பத்தையும் தமிழ் இரசிகர்களிடத்தில் ஆழப் பதிய வைத்து விட்டுச் சென்றவர் ஷில்பா.

#TamilSchoolmychoice

Shilpa11இடையில் இவர் யோகா மீது காட்டிய ஆர்வமும், அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட யோகா புகைப்படங்கள், காணொளிகள் (வீடியோ) இலட்சக்கணக்கான இரசிகர்களால் பார்க்கப்பட்டன. ஆனால் எத்தனை பேர் ஷில்பா ஷெட்டி காட்டிய அந்த யோகாசனப் பயிற்சிகளை செய்துப் பார்த்திருப்பார்கள் என்பது வேறு விஷயம்!!!

Shilpa02கணவர் ராஜ் குந்த்ராவுடன் ஷில்பா…

2009-இல் ராஜ் குந்த்ரா என்ற தயாரிப்பாளரை மணந்து கொண்டார் ஷில்பா. ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இப்போது வயதோ 41, ஆகி விட்டது. ஆனாலும் இளமை குறையவில்லை. கட்டுடல் குலையவில்லை. காரணம் யோகா! யோகா! யோகாதான் – என அடித்துச் சொல்கிறார் ஷில்பா.

அதற்கேற்ப தனது இளமை குறையாத அழகான தோற்றங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவேற்றம் செய்து இரசிகர்களை இன்னும் கிறங்கடிக்கச் செய்கிறார் ஷில்பா. கல்யாணம் ஆனாலும், தாய் ஆனாலும் தனது புகைப்படங்களின் வழி கவர்ச்சி காட்டுவதை இன்னும் கைவிட்டு விடவில்லை ஷில்பா. அந்த வகையில் அவரது இரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்!

Shilpa09ஷில்பா யோகாசனம் செய்யும் காட்சி…

அண்மையில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜேக்கி சான் நடித்த “குங்பூ யோகா” படத்தின் அறிமுக விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார் ஷில்பா. இதில் டிஷா பட்டானி என்ற நடிகை  யோகக் கலை தெரிந்த இளவரசியாக நடித்திருக்கிறார்.

Shilpa04‘குங்பூ யோகா’ பட அறிமுக விழாவில் ஜேக்கி சான், சோனு சூட், ஆகியோருடன் யோகாசனம் ஒன்றைச் செய்து காட்டும் ஷில்பா…

ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவரது படக் காட்சிகள் சில:

Shilpa10“இப்படி உடலை வளைத்து யோகா செய்தால் என்றும் என்னைப் போல் இளமையாக இருக்கலாம்”

Shilpa08எத்தனை நவீன – மேற்கத்திய கவர்ச்சி ஆடைகள் அணிந்தாலும் சேலைக்கு இணையாகுமா? புதுவிதமான வடிவமைப்பு கொண்ட சேலைக் கட்டில் ஷில்பா…படத்தில் இருப்பதுபோல் தலைநிறைய பூச்சூடிக் கொள்வதும் தென்னிந்தியப் பெண்ணான தனக்குப் பிடிக்கும் என்கிறார் ஷில்பா…

Shilpa07“இப்படியும் சேலை கட்டலாம் – என்னைப் போல் உடல்வாகு இருந்தால்…”

Shilpa06தனது வித்தியாசமான சேலை வடிவமைப்பு ஆர்வத்தைக் காட்டும் ஷில்பா…

Shilpa05பிப்ரவரி 19-இல் நடைபெற்ற மிர்ச்சி விருதுகள் விழாவுக்குச் செல்லும் போது இந்த ஆடை…

Shilpa03ஷில்பா ஷெட்டியின் எளிமையான – கவர்ச்சியான தோற்றம்…

Shilpa01ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது…

-செல்லியல் தொகுப்பு