Home கலை உலகம் ஷில்பா ஷெட்டி, அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது ஏமாற்று மோசடி வழக்கு

ஷில்பா ஷெட்டி, அவரின் கணவர் ராஜ் குந்த்ரா மீது ஏமாற்று மோசடி வழக்கு

914
0
SHARE
Ad

புதுடில்லி : ஏற்கனவே, ஆபாசப் பட காணொலி வழக்கு விவகாரத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருப்பவர் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா.

அவர் மீதும் அவரின் மனைவி ஷில்பா ஷெட்டி மீதும் புதியதொரு ஏமாற்று மோசடி வழக்கை மும்பை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர்.

ஓர் உடற்பயிற்சி மையத்தைத் தொடக்குவதற்காக 15.1 மில்லியன் ரூபாய் பணத்தை முதலீடாக தன்னிடம் கேட்டதாக வணிகர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த முதலீட்டின் மூலம் இலாபம் பெற முடியும் என்றும் தன்னிடம் உறுதி மொழி வழங்கப்பட்டதாகவும் அந்த வணிகர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே இதுபோன்ற பல புகார்கள் ஷில்பா ஷெட்டி மீதும் அவர் கணவர் மீதும் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

பிரபல நடிகையான ஷில்பா ஷெட்டி, ஒரு காலத்தில் இந்திப் படவுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தார். பின்னர் வணிகரான ராஜ் குந்தராவை மணம் புரிந்தார்.

யோகா செய்வதன் மூலம் உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் ஷில்பா ஷெட்டி யோகா குறித்த பல்வேறு காணொலிகள், புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர்.