ராஜ் குந்த்ரா, நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவராவார். கடந்த ஜூலை மாதத்தில் அவர் ஆபாசக் காணொலி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைச் சமர்ப்பித்த ராஜ் குந்த்ராவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை மும்பை நீதிமன்றம் 50 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகையுடன் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கியது.
Comments