Home உலகம் ரஷியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் மரணம்

ரஷியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் மரணம்

563
0
SHARE
Ad

மாஸ்கோ : ரஷியாவின் பெர்ம் என்ற நகரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 வரை இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.