Home நாடு “மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி

“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி

701
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற டத்தோ ஆர்.தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சியின் ஆண்டுக் கூட்டத்தை அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ சாஹிட் ஹாமிடி தொடக்கி வைத்தார்.

அவரின் உரையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சக்தி கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் சாஹிட் வெளியிட்டார்.

அதே ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.தனேந்திரன், தமது கட்சி 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட இலக்கு கொண்டிப்பதாகவும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி அம்னோவைச் சாடி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு:

“அம்னோ, மக்கள் சக்தி கட்சியை வைத்து இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்”

குறிப்பாக தேசிய முன்னணியும் மற்றும் அம்னோவும் ம இ காவை விட்டு பிரிந்து செல்ல விரும்புவது போல் தெரிகிறது. பல ஆண்டுகளாக தேசிய முன்னணியுடன் அணுக்கமாக இருந்த அரசியல் கட்சி ம இ கா, பெரிக்காதான் அரசுக்கு ஆதரவு தெரிவித்ததை கருத்தில் கொண்டு ம இ காவை இனி நம்ப முடியாது என்பதை சமீபத்தில் அம்னோ கண்டறிந்துள்ளது.

பெர்சத்துவுக்கும் அம்னோவுக்கும் இடையே சமீபத்தில் நடந்த அதிகாரப் போட்டியில், ம இ கா பெர்சத்துவை ஆதரித்திருக்கலாம்.

உண்மையில் இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ம இ காவை அம்னோவால் நம்பாமல் போனதற்கு காரணங்கள் உள்ளன.

ம இ கா இனி அம்னோவின் “இந்திய பிரதிநிதி” அல்ல என்பதால், மக்கள் சக்தி கட்சியை தேசிய முன்னணிக்குள் சேர்க்க தெளிவான அம்னோ விருப்பம் கொண்டுள்ளது.

ம இ காவுடன் ஒப்பிடுகையில், மக்கள் சக்தி அம்னோவுக்கு அடிபணிந்தும் விசுவாசமானதாகவும் உள்ளது. அம்னோ அரசியல்வாதிகளுக்கு இது சரியான “ஆமாம் சாமி” கட்சியாக இருக்கும்.

ம இ காவுக்கு பதிலாக மக்கள் சக்தியை அம்னோ மாற்ற முடிந்தாலும், அது இந்திய சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

உண்மையில், சுயமரியாதை மற்றும் தன்மானம் கொண்ட இந்தியர்களுக்கு இனி இந்த அடிமை கட்சிகளின் சேவைகள் தேவையில்லை.

ம இ கா, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் முன்னேற்றத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், இந்தியர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமையை மாற்ற மக்கள் சக்தியைக் கொண்டா அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி இந்தியர்களை மேம்படுத்தப் போகிறார்?

ஆனால் ஹிண்ட்ராப் தொடங்கிய போராட்டத்தை அரசியல் ரீதியாக முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சி இந்தியர்களுக்கு சரியான கட்சியாக இருக்காது.

நவம்பர் 2007-இல் கோலாலம்பூரில் ஒரு பெரிய போராட்டத்தை ஏற்பாடு செய்ய குறைந்தபட்சம் ஹிண்ட்ராப் கண்ணியத்தையும் சுயமரியாதையையும் கொண்டிருந்தது.

ஹிண்ட்ராப் நடத்திய போராட்டத்திற்கு மக்கள் சக்தி அருகில் வர முடியுமா? என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.

தலைமை அதிகாரம் மற்றும் பதவிகளில் மட்டுமே மக்கள் சக்தி அக்கறை கொண்டுள்ளது.

சாஹிட் முன்னாள் துணைப் பிரதமராகவும், அம்னோவின் தற்போதைய தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அவர் மக்கள் சக்தியை நாடுவது மோசமான தேர்வாகும்.

சாஹிட் மஇகாவின் விசுவாசமின்மைக்காக தண்டிக்கலாம்.

ஆனால் அவர் மலேசியாவில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

மக்கள் சக்தி இந்தியர்களுக்கு ஒரு நம்பிக்கையான முன்னோடி அல்ல!


Join us on our Telegram channel for more news and latest updates:https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal