Home Featured கலையுலகம் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது ‘மூன்லைட்’

சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது ‘மூன்லைட்’

757
0
SHARE
Ad

moonlight1_10199லாஸ் ஏஞ்சல்ஸ் -அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை (மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை) காலை முதல் நடைபெற்று வரும் ஆஸ்கார் விருதளிப்பு விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை ‘மூன்லைட்’ வென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை ‘மான்செஸ்டர் பை த சீ – Manchester By The Sea‘ திரைப்படத்திற்காக கேசே ஆஃப்லெக் வென்றார்.

சிறந்த நடிகைக்கான விருதை ‘லா லா லேண்ட்’ திரைப்படத்திற்காக நடிகை எம்மா ஸ்டோன் வென்றார். இதன் மூலம் ஏற்கனவே 5 ஆஸ்கார் வென்றிருந்த ‘லா லா லேண்டிற்கு’ மேலும் ஒன்று சேர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

la-la-land-ryan-gosling-emma-stone-1சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக் கலப்பு ஆகிய இரு பிரிவுகளில் ‘ஹாக்சா ரிட்ஜ்’ என்ற அமெரிக்க – ஆஸ்திரேலிய கூட்டுத் தயாரிப்பு திரைப்படம் ஆஸ்கார் வென்றிருக்கிறது.

இது தவிர மற்ற பிரிவுகளில் வென்ற திரைப்படங்கள்:

சிறந்த காட்சி விளைவு (Visual Effect) – ‘தி ஜங்கிள் புக்’

சிறந்த தழுவல் திரைக்கதை – மூன்லைட்

சிறந்த திரைக்கதை – ‘மான்செஸ்டர் பை த சீ’

சிறந்த பாடல் – சிட்டி ஆஃப் ஸ்டார்ஸ் (படம்: லா லா லேண்ட்)

சிறந்த ஆடை வடிவமைப்பு- காலின் அட்வுட் (படம்: பெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அண்ட் வேர் டூ பைண்ட் தெம்)

சிறந்த ஆவண குறும்படம் – ‘தி வைட் ஹெல்மெட்ஸ்’

சிறந்த குறும்படம் (லைவ் ஆக்சன்) – ‘சிங்’

சிறந்த குறும்படம் (அனிமேஷன்) – ‘பைபெர்’

சிறந்த ஒலித்தொகுப்பு- சில்வியன் பெல்மேர் (படம்: அரைவல்)