Home Featured கலையுலகம் ஆஸ்கார் 2017: 5 விருதுகளைத் தட்டிச் சென்றது ‘லா லா லேண்ட்’

ஆஸ்கார் 2017: 5 விருதுகளைத் தட்டிச் சென்றது ‘லா லா லேண்ட்’

921
0
SHARE
Ad

la-la-land-movieலாஸ் ஏஞ்சல்ஸ் – ஆண்டுதோறும் உலகம் எங்கும் உள்ள கோடிக்கணக்கான சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

அதில், மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ‘லா லா லேண்ட்’ திரைப்படம், தற்போது வரை 5 பிரிவுகளில் ஆஸ்கார் வென்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

அதன்படி, சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பாடல் பிரிவுகளில் ஆஸ்கார் வென்றிருக்கிறது.

அவ்விருதுகளை லா லா லேண்ட் இயக்குநர் டேமியன் சாசெல்லே, ஒளிப்பதிவாளர் லினஸ், இசையமைப்பாளர் ஜஸ்டின் ஹார்விஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.