Home Featured உலகம் இலங்கையில் சிறை பேருந்து மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

இலங்கையில் சிறை பேருந்து மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி!

583
0
SHARE
Ad

SriLankaFlagPicture5கொழும்பு – இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இன்று திங்கட்கிழமை சிறை பேருந்து ஒன்றில், துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 5 கைதிகள், 2 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர்.

குண்டர் கும்பலைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி உட்பட சிறைக் கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சிறைப் பேருந்தை வழியில் மடக்கிய ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பேருந்தை நோக்கிக் கண்மூடித்தனமாக சுட்டதாக சிறைத்துறை செய்தித் தொடர்பாளர் துஷாரா உபுல்டெனியா தெரிவித்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் அப்பேருந்தில் இருந்த 5 கைதிகளும், 2 சிறை அதிகாரிகளும் மரணமடைந்தனர். மேலும் 9 அதிகாரிகள் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இரண்டு குண்டர் கும்பல்களுக்கு இடையில் இருந்து வந்த நீண்ட நாள் பகை தான் இத்தாக்குதலுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக காவல்துறை தரப்பு செய்தித் தொடர்பாளர் பிரியங்கா ஜெயக்கொடி தெரிவித்திருக்கிறார்.