Home Featured கலையுலகம் ஆஸ்கார் சுவாரசியங்கள் : கூரையிலிருந்து கொட்டிய தின்பண்டங்கள்!

ஆஸ்கார் சுவாரசியங்கள் : கூரையிலிருந்து கொட்டிய தின்பண்டங்கள்!

897
0
SHARE
Ad

oscars-2017-candies falling

லாஸ் ஏஞ்சல்ஸ் – நேற்று நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் இடம் பெற்ற மற்றொரு சுவாரசியம் கூரையிலிருந்து கொட்டிய தின்பண்டங்கள் என்றால் அது என்ன என்று ஆச்சரியப்படுவீர்கள்.

நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் நிகழ்ச்சியின் நடுவில் “சரி எல்லோருக்கும் பசிக்கிறதா? படங்களைப் பார்க்கும் போது இடையில் தின்பண்டங்கள் சாப்பிடுவோம். அதுபோல் இப்போதும் ஏதாவது வேண்டுமா என கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இது என்ன கிண்டலா? எப்படி நிகழ்ச்சியின் நடுவில் இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் தின்பண்டங்கள் விநியோகிக்கப்படும் என அறிவிப்பாளரையே பார்த்தார்கள்.

#TamilSchoolmychoice

“சரி! கேண்டீஸ் தின்பண்டங்களைப் போடுங்கள்” என்று அறிவிப்பாளர் கூறியதும் மேல் கூரையிலிருந்து சாரை சாரையாக சிறு சிறு பைகளில், வான்குடை போன்று மேலிருந்து வந்திறங்கின தின்பண்டங்கள் – மேலே படத்தில் காண்பது போல்!

தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, இது போன்று மூன்று முறை தின்பண்டங்கள் மேலிருந்து போடப்பட்டன. அமர்ந்திருந்தவர்கள் அதனைக் கையால் பிடித்து அருகிலிருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

மூன்றாவது முறையாக ‘டோனட்’ என்ற தின்பண்டம் மேலிருந்து போடப்பட்டது.

அப்போது அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் ” சரி தின்பண்டங்கள் போட்டாகி விட்டது. இனி காப்பியை அனுப்பலாமே” என மேலே பார்த்துக் கூறிய போது அரங்கமே சிரிப்பில் ஆழ்ந்தது.

-செல்லியல் தொகுப்பு