Home Featured கலையுலகம் ஆஸ்கார் 2017 : இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி!

ஆஸ்கார் 2017 : இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி!

787
0
SHARE
Ad

Om+Puri+West+West+Portraits+54th+BFI+London+pARUUMWhPpjl

லாஸ் ஏஞ்சல்ஸ் – கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் மறைந்த இந்தி நடிகர் ஓம் புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆண்டு தோறும் வழக்கமாக நடைபெறும் இந்த விழாவில் ஓர் அங்கமாக கடந்த ஓராண்டில் மறைந்த திரைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் திரையில் காட்டப்பட்டு அஞ்சலி செலுத்தப்படும்.

#TamilSchoolmychoice

வழக்கமாக, ஹாலிவுட் திரையுலகில் மறைந்த கலைஞர்களுக்குத்தான் இது போன்று அஞ்சலி செலுத்தப்படும்.

இந்த முறை மேடையில் பாடகர் ஒருவர் வந்து மறைந்தவர்களுக்கான அஞ்சலி பாடலைப் பாடியபோது, வரிசையாக கடந்த ஓராண்டில் மறைந்த கலைஞர்களின் புகைப்படங்கள் காட்டப்பட்டன.

அந்த வரிசையில் 6 ஜனவரி 2017-இல் மறைந்த பிரபல இந்தி நடிகர் ஓம் புரி புகைப்படமும் திரையில் காட்டப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஓம் புரி சில ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.