Home Featured வணிகம் மலிண்டோவிற்காக புதிய போயிங் விமானங்களை வாங்குகிறது லைன்ஸ் குழுமம்

மலிண்டோவிற்காக புதிய போயிங் விமானங்களை வாங்குகிறது லைன்ஸ் குழுமம்

984
0
SHARE
Ad

malindoலங்காவி – மலிண்டோ ஏர் நிறுவனத்திற்காக, போயிங் 737 மேக்ஸ் மற்றும் போயிங் 737 புதிய தலைமுறை விமானம் என இரண்டு புதிய இரக விமானங்களை வாங்குவதாக லைன் குழுமம் அறிவித்திருக்கிறது.

இதற்காக 23 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவிருப்பதாகவும் அக்குழுமம் தற்போது லங்காவியில் நடைபெற்று வரும் லீமா 2017 கண்காட்சியில் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து லைன் குழுமத்தின் இணை நிறுவனர் ருஸ்டி கிரானா கூறுகையில், “உலகிலேயே மலிண்டோ தான் 737 மேக்ஸ் இரக விமானத்தைப் பயன்படுத்தப் போகிறது. அது எண்ணெய் செலவில் 20 விழுக்காடு வரை சேமிக்கிறது.” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், போயிங் 737 அடுத்த தலைமுறை (Next Generation) விமானம், கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று ருஸ்டி கிரானா தெரிவித்தார்.