Home Featured கலையுலகம் டிஎச்ஆர் ராகாவைக் கேட்டு 40,000 ரிங்கிட்டுக்கும் மேல் பரிசுத் தொகையை வெல்லுங்கள்

டிஎச்ஆர் ராகாவைக் கேட்டு 40,000 ரிங்கிட்டுக்கும் மேல் பரிசுத் தொகையை வெல்லுங்கள்

1057
0
SHARE
Ad

THR1கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 27-ம் தேதி முதல், டி.எச்.ஆர் ராகாவில் 40, 000 ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட பரிசுத் தொகையை வெல்ல  ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு காத்துக் கொண்டிருக்கின்றது.

இது குறித்து டி.எச்.ஆர் ராகாவின் தலைவர், சுப்ராமணியம் வீரசாமி கூறுகையில், “டி.எச்.ஆர் ராகா தொடர்ந்து முதல் நிலைத் தமிழ் வானொலியாக இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இவ்வேளையில் எங்களுடைய இரசிகர்களுக்கு நன்றி. இரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மேற்கொள்ளும் இப்புதிய முயற்சிகள் டி.எச்.ஆர் ராகா மலேசியாவில் மக்களின் மத்தியில் தொடர்ந்து தங்களுடைய விருப்ப வானொலி நிலையமாக இருக்கும் என நம்புகிறேன்”

“மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரசிகர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக, டி.எச்.ஆர் ராகாவில் ‘கொஞ்சம் பார்த்து பாடுங்க’ மற்றும் ‘பெட்டிக்குள் என்ன?’ என இரண்டு போட்டிகள் இடம்பெறவிருக்கிறது. இவ்விரண்டு போட்டிகளும் டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிரம் பக்கத்தில் நடத்தபடவிருக்கிறது” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கொஞ்சம் பார்த்து பாடுங்க

THRஇப்போட்டியில் 20,000 ரிங்கிட் வரையிலான தொகை பரிசாக ரசிகர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அறிவிப்பாளர்களால் பாடப்பட்ட பாடல் காணொளிகள் ஒலி நீக்கப்பட்டு டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிரமில் பதிவேற்றம் செய்யப்படும். அக்காணொளியை கவனித்து சரியான பதிலை குறிப்பிட்ட நேரத்தில் அழைத்து  பதில் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 500 ரிங்கிட் ரொக்கம் பரிசாக  வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் யாரும் வெற்றி பெறவில்லையென்றால் அத்தொகை அடுத்த நிகழ்ச்சியின் போது பனி பந்தாகும் (Snow Balls).

பெட்டிக்குள் என்ன

THR2பெட்டிக்குள் என்ன போட்டியின் வழி இரசிகர்கள் 22,500 ரிங்கிட் தொகையைப் பரிசாக வெல்லலாம். ‘கலக்கல் காலை’ அறிவிப்பாளர்களான ஆனந்தா மற்றும் உதயா, தங்களுடைய இதர அறிவிப்பாளர்களையும் மலேசிய கலைஞர்களையும் அழைத்து அவர்களின் கண்களைக் கட்டி, பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருளைத் தொட்டு, அதனை 10 நிமிடங்களில் வர்ணிக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட அக்காணொளி டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூலில் போட்டிக்காக பதிவேற்றம் செய்யப்படும். சரியான பதிலைச் சொல்ல போட்டியாளர்கள் அழைக்கலாம். இப்போட்டி நான்கு அங்கங்களாக நடத்தப்படும். வார நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00  வரை இரசிகர்கள் பங்கெடுக்கலாம்.

வெற்றியாளர்கள் இனிமை@ராகா அங்கத்தின் போது அறிவிக்கப்படுவார்கள். இப்போட்டியில் ஒவ்வொரு நாளும் 1500 ரிங்கிட் வழங்கப்படும். இத்தொலை வெற்றியாளர்களுக்கு சமமாக வழங்கப்படும்.

ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் ‘கலக்கல் காலை’, ‘ஹலோ நண்பா’, ‘ஹைப்பர் மாலை’ மற்றும் ‘இனிமை@ராகா’ நிகழ்ச்சிகளில் மட்டுமே இப்போட்டிகள் இடம்பெறும்.

மேல் விவரங்களுக்கு raaga.thr.fm அகப்பக்கத்தை நாடுங்கள்.