Home கலை உலகம் ‘ராகா ஐடல் 2.0’ பாடல் போட்டி : தேர்வுகளில் பங்கேற்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

‘ராகா ஐடல் 2.0’ பாடல் போட்டி : தேர்வுகளில் பங்கேற்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

421
0
SHARE
Ad

*‘ராகா ஐடல் 2.0’ பாடல் போட்டியின் தேர்வுகளில் பங்கேற்க மலேசியர்கள் அழைக்கப்படுகின்றனர்

*3,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்லவும் சுயப் பாடலை வெளியிடுவதற்கான வாய்ப்பைப் பெறவும் இப்போது முதல் மார்ச் 3 வரை தேர்வுகளில் (ஆடிஷன்) பங்கேறுங்கள்

‘ராகா ஐடல் 2.0’ போட்டியைப் பற்றி சில விவரங்கள்:

#TamilSchoolmychoice

• 3,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை வெல்லவும் சுயப் பாடலை வெளியிடுவதற்கான வாய்ப்பைப் பெறவும் இப்போது முதல் மார்ச் 3 வரை நடைபெறும் ‘ராகா ஐடல் 2.0’ பாடல் போட்டியின் தேர்வுகளில் (ஆடிஷனில்) பங்கேற்கப் பாடுவதில் ஆர்வம் கொண்ட அனைத்து மலேசியர்களும் அழைக்கப்படுகின்றனர்.

• போட்டியாளர்கள் raaga.syok.my -இலிருந்து ஒரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பின்னணி இசை இல்லாமல் பாடிய ஒரு நிமிட அசல் காணொலியைப் பதிவு செய்ய வேண்டும்.

• பின்னர், அவர்கள் #raagaidol2 என்ற பின்தொடரலை (ஹேஷ்டேக்கைப்) பதிவில் இணைத்து @raaga.my-ஐ குறியிட்டுப் (tag) பதிவு செய்யப்பட்டக் காணொலியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்ற வேண்டும். போட்டியின் காலக்கட்டத்தில் போட்டியாளர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ‘பொதுவாக’ அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

• raaga.syok.my வழியாக 11 முதல் மார்ச் 15 வரை நடைபெறும் பொது வாக்களிப்பிற்காகப் பெறப்பட்டச் சமர்ப்பிப்புகளிலிருந்து பத்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

• பின், மார்ச் 23 நடைபெறும் இறுதிச் சுற்றில் கலந்துக்கொள்ள அதிக வாக்குகளைப் பெற்ற ஐந்து போட்டியாளர்கள் தேர்வுச் செய்யப்படுவார்கள்.

• நடுவர்களிடமிருந்து அதிகப் புள்ளிகளைப் பெறும் போட்டியாளர் வெற்றியாளராக மகுடம் சூட்டப்படுவார். 3000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வதோடு தனதுச் சுயப் பாடலை வெளியிடும் வாய்ப்பையும் பெறுவார்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.