Home Featured கலையுலகம் மலேசியாவில் ‘சதுரங்க வேட்டை 2’ படப்பிடிப்பு!

மலேசியாவில் ‘சதுரங்க வேட்டை 2’ படப்பிடிப்பு!

1029
0
SHARE
Ad

Arvind1கோலாலம்பூர் – அரவிந்த் சுவாமி, திரிஷா இணைந்து நடித்து வரும் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது.

பினாங்கின் பிரபல சுற்றுலாத் தளமான பத்து பெரிங்கி, பினாங்கு ரோடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இப்படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அரவிந்த் சுவாமியும், திரிஷாவும் மலேசியா வந்திருக்கின்றனர்.

Arvindநேற்று வெள்ளிக்கிழமை ‘கிளாமரஸ் மேஸ்’ என்பவரது பேஸ்புக் பக்கத்தில் அரவிந்த் சுவாமி படப்பிடிப்பில் இருப்பது போன்ற காணொளி வெளியானது. நடிகை திரிஷாவும் படப்பிடிப்பில் இருப்பது போன்ற படம் ஒன்றைத் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

Trishaஅதேபோல், நடிகர் அரவிந்த் சுவாமியும், தனது டுவிட்டரில் தான் ‘சதுரங்க வேட்டை 2’ படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.