Home Featured நாடு பிரிக்பீல்ட்சில் 6 மாதங்களாகக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

பிரிக்பீல்ட்சில் 6 மாதங்களாகக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது!

784
0
SHARE
Ad

Gangகோலாலம்பூர் – கடந்த 6 மாதங்களாக பிரிக்பீல்ட்ஸ் பகுதியில், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குண்டர் கும்பல் ஒன்றை, கடந்த திங்கட்கிழமை பினாங்கு மாநிலம் நிபோங் திபாலில் வைத்துக் காவல்துறையினர் கைது செய்தனர்.

வீட்டை உடைத்துக் கொள்ளையடிப்பது, வாகனங்களைத் திருடிச் செல்வது போன்ற சம்பவங்களில் அக்கும்பல் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

30 முதல் 35 வயது வரையிலான அந்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் மீது, கொள்ளை, வாகனத் திருட்டு மற்றும் போதை ஆகிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இது குறித்து பிரிக்பீல்ட்ஸ் ஓசிபிடி துணை ஆணையர் ஷாருல் ஓத்மான் கூறுகையில், 1 மாதம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கண்காணிப்பில் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கைதான அவர்களிடமிருந்து டோயோட்டா கேம்ரி, ஹோண்டா சிவிக், ஹோண்டா சிட்டி, டொயோட்டா வெல்பயர், மாஸ்டா சிஎக்ஸ்-5 ஆகிய 5 வாகனங்களும், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் ஷாருல் ஓத்மான் குறிப்பிட்டிருக்கிறார்.

அவற்றின் மதிப்பு சுமார் 1 மில்லியன் ரிங்கிட் இருக்கும் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.