கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 1), பிரிக்பீல்ட்ஸ்சில் உள்ள ஓர் உணவகத்தில் கலகம் ஏற்பட்ட காணொலி வாட்சாப் மூலமாக பரவியது.
அக்காணொலியில் உணவக ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே சண்டை மூண்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே, இந்த கலகத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
உணவகம் மூடப்படுவதால் அவர்களுக்கு உணவு வழங்க மறுத்ததால் ஐந்து பேரும் கலவரத்தைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
19 முதல் 23 வயதுக்குட்பட்ட ஆடவர்கள் இந்த கலகத்தை மூட்டியுள்ளனர். ஒரு குழுவாக உணவகத்தின் நாற்காலிகள் மற்றும் மேசைகளை தூக்கி எறிவதைக் காண முடிகிறது.
இந்த ஐந்து பேரும் நகரின் பல்வேறு பகுதிகளிலும், சிலாங்கூரிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் காவ்ல் துறைத் தலைவர் அனுவார் ஒமர் தெரிவித்தார். அனைவருக்கும் எந்தவொரு குற்றப் பதிவுகள் இல்லை.
கலவரத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 148-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.