இந்த பதிவிற்குப் பிறகு தேமுதிக, அதிமுகவுடன் இணையாத சூழல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் தொடர்ந்து வரும் நிலையில் தனித்துப் போட்டியிடுவதை குறிப்பிடும் வகையில் சுதீஷ் தனது முகநூல் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு போட்டியிட தொகுதிகள் கொடுக்கப்படாததால், தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போது, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தங்களுக்கு தரப்படவில்லை என்று கடும் கோபத்தில் பிரேமலதா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மறுபுறம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், தேமுதிக கூட்டணி வைக்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.