Home One Line P1 ‘நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட நியமனங்கள், திறமையற்றவர்களால் நிரப்பப்படுகிறது’

‘நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட நியமனங்கள், திறமையற்றவர்களால் நிரப்பப்படுகிறது’

453
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி காலத்தில் செய்யப்பட்ட பல நியமனங்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்காததால் மாற்றப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அவர்கள் திறமையானவர்களை தேர்ந்தெடுத்ததாகவும், இறுதியில் அரசாங்கம் மாறிய பின்னர் அவர்கள் திறமையற்றவர்களால் மாற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.

“இந்நேரத்தில் நியமிக்கப்பட்ட பலர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தை ஆதரவளிக்கவில்லை.

#TamilSchoolmychoice

“நாம் தேர்ந்தெடுத்த நபர்கள் – புத்திசாலிகள், தொழில்முனைவர்கள், திறமையானவர்கள் – திறமையற்றவர்களல் மாற்றப்படுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கிறது, ” என்று அவர் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கூறினார்.