Home Featured நாடு லாரணியா மரணம்: “ஒளிவு மறைவின்றி விசாரணை” சுப்ரா உறுதி!

லாரணியா மரணம்: “ஒளிவு மறைவின்றி விசாரணை” சுப்ரா உறுதி!

788
0
SHARE
Ad

subra-drபுத்ரா ஜெயா – கிள்ளான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மரணமடைந்த சிறுமி லாரணியா மரணம் குறித்து முழு விசாரணைகளும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உறுதியளித்தார்.

“கடந்த 20ஆம் தேதி மரணமடைந்த சிறுமி லாரணியா மரணச் சம்பவம் தொடர்பாக எழுந்த பிரச்சனை சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளை விளக்கமளிக்கக் கோருமாறு சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் அலுவலகத்திற்குக் கோரிக்கை விடுத்திருந்தேன். இதற்கிடையில் கடந்த 23ஆம் தேதி சிறுமி லாரணியாவின் தாயார் அவர்தம் உறவினர்களுடன் என்னைக் காண வந்தனர். அவர்களிடத்தில் இருக்கும் சந்தேகங்களையும் அதிருப்திகளையும் என்னிடம் முறையிட்டுச் சென்றனர்” என்றும் டாக்டர் சுப்ரா இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

“அதேநேரத்தில் அதற்கு மறுநாள் சுகாதார அமைச்சில் உயர் அதிகாரிகளுடனான சந்திப்புக் கூட்டத்தில் (Post Cabinet meeting) இச்சம்பவம் தொடர்பான முழு விசாரணை எவ்வித ஒளிவு மறைவுகளுக்கும் இடமின்றியும் பாராபட்சமின்றியும் விசாரிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டத்தோ ஹிஷாம் அவர்களுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளேன். எனவே, இம்மரணச் சம்பவம் தொடர்பாக சுகாதார அமைச்சு நிச்சயமாக மெளனம் சாதிக்கவில்லை என்பதை இதன்வழி தெளிவுப்படுத்த விரும்புகிறேன். இச்சம்பவம் தொடர்பாகத் தகுந்த ஆதாரங்களுடன் தொடர் விசாரணை நடத்தப்படும். பொது விசாரணைக் குழு வழி விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என தனது அறிக்கையில் டாக்டர் சுப்ரா உறுதியளித்தார்.

#TamilSchoolmychoice

சிறுமி லாரணியாவின் மரணத்திற்காக, அவரது தாயாருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் டாக்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.