Home Featured தமிழ் நாடு தமிழக ஆளுநர் மாளிகையின் அழகில் மயங்கிய நஜிப்!

தமிழக ஆளுநர் மாளிகையின் அழகில் மயங்கிய நஜிப்!

967
0
SHARE
Ad

najib-chennai-rajbavan-1சென்னை – நேற்று வியாழக்கிழமை சென்னையிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு (மேலே உள்ள படம்) வருகை தந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், அங்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

பழம் பெருமை வாய்ந்த ராஜ்பவனின் பிரம்மாண்டத்திலும் அழகிலும் மயங்கிய நஜிப் அந்த மாளிகையைச் சுற்றித் தான் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

“ராஜ்பவனின் அழகிய இரவு நேரக் காட்சிகள்” எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நஜிப் இந்தப் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

najib-chennai-rajbavan-photosராஜ்பவனைச் சுற்றியிருக்கும் தோட்டத்தில் நிறைய மான்கள் வளர்க்கப்படுகின்றன. மான்களின் அழகில் மயங்கிய நஜிப் எடுத்த அந்த மான்களின் படம்….

najib-chennai-raj bavan-2ராஜ்பவன் வளாகத்தில் சுற்றித் திரிந்த மான்கள் – நஜிப்பின் புகைப்படக் கண்களின் வழியே….