Home Featured தொழில் நுட்பம் ஏப்-11 முதல் சாம்சுங் கேலக்சி எஸ் 8, 8+ முன்பதிவு!

ஏப்-11 முதல் சாம்சுங் கேலக்சி எஸ் 8, 8+ முன்பதிவு!

1414
0
SHARE
Ad

Samsung 8, 8+கோலாலம்பூர் – சாம்சுங் நிறுவனம் தனது கேலக்சி எஸ் 8, 8+ என்ற இரண்டு புதிய தலைமுறை திறன்பேசிகளை, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அண்மையில் அறிமுகம் செய்திருக்கிறது.

மலேசியாவில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படாத நிலையில், கேலக்சி எஸ் 8, 8+ என்ற இரண்டு புதிய இரகத் திறன்பேசிகளையும்,  மலேசியர்கள் முன்பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அதன்படி, வரும் ஏப்ரல் 11-ம் தேதி, காலை 10 மணியளவில் தொடங்கும் இந்த முன்பதிவு, ஏப்ரல் 13-ம் தேதி இரவு 11.59 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

கேலக்சி எஸ் 8, 8+ ஆகியவை முறையே மலேசிய மதிப்பில் 3,299 ரிங்கிட் மற்றும் 3,699 ரிங்கிட் விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

முன்பதிவு செய்பவர்கள் 300 ரிங்கிட் முன்பணம் செலுத்த வேண்டும். அதனையடுத்து, வரும் மே 4-ம் தேதி, முன்பதிவு செய்தவர்களுக்கு திறன்பேசி விநியோகம் செய்யப்படும் என சாம்சுங் அறிவித்திருக்கிறது. மே 5-ம் தேதி, இந்தத் திறன்பேசிகள் மலேசியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் ஆகிறது.

இதனிடையே, முன்பதிவு செய்பவர்களுக்கு 900 ரிங்கிட் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேல் விவரங்களை www.samsung.com/my/s8preorder என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.