Home Featured கலையுலகம் ஜாஸ்மின் நடிக்கும் ‘தேடல்கள்’ தொலைக்காட்சிப் படம்!

ஜாஸ்மின் நடிக்கும் ‘தேடல்கள்’ தொலைக்காட்சிப் படம்!

910
0
SHARE
Ad

Jasmineகோலாலம்பூர் – மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார்.

அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு காலமாகவே, அவரது இரத்த சொந்த உறவினர் ஒருவர் இறந்தவரின் காப்பீடு பணத்தைக் கொடுக்குமாறு நிறுவனத்தைக் கேட்கின்றார்.

அவர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள பணியாளர்களிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்வதுமாக இருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஒரு நாள் ராமன் அவரது வீட்டிற்குச் சென்று போலீஸ் விசாரணை முடியும் வரை காப்புறுதி இழப்பிடு தர முடியாது என்கிறார்.

அதனைக் கேட்டு கோபமடைந்த அவர், ராமனைத் தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே அனுப்புகின்றார். பிறகு, ராமன் இந்த வழக்குக் குறித்து ஆழமாக விசாரிக்க தொடங்கின்றார். அப்பொழுது எதிர்பாராத திருப்பங்களைக் கண்டு பிடிக்கின்றார்.

இத்தொலைக்காட்சிப் படத்தில் நடிகை ஜாஸ்மின் மைக்கேல் முதல் முறையாக வித்தியாசமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இவருடன் லிங்கேஸ், பால கணபதி, கிர்த்திகா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இயக்குனர் வி.நாகராஜ் இத்தொலைக்காட்சிப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு ‘தேடல்கள்’ தொலைக்காட்சிப் படத்தை அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201 மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் காணத்தவறாதீர்கள்.