மணிலா – இன்று சனிக்கிழமை பிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் (யுஎஸ்ஜிஎஸ்) அறிவித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் மிண்டானோ என்ற பகுதியில் 41 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக யுஎஸ்ஜிஎஸ் கூறுகின்றது.
இதனிடையே, பிலிப்பைன்ஸ், இந்தோனிசிய கடற்பகுதிகளில் சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியிருக்கிறது.