Home Featured உலகம் கொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு!

கொழும்பு – வாரணாசி இடையே நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு!

825
0
SHARE
Ad

ModiSrilankaகொழும்பு – அனைத்துலக விசாக தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் பயணமாக ஸ்ரீலங்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வரும் விசாக தினக் கொண்டாடத்திற்குத் தலைமை வகித்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மோடி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கொழும்பு – வாரணாசி இடையில் நேரடி விமானச் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால் நமது தமிழ்ச் சகோதரர்கள் கொழும்பில் இருந்து நேரடியாக வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதரை வழிபட முடியும் என்றும் மோடி தெரிவித்தார்.