Home Featured கலையுலகம் காட்சிகள் இரத்தா? – ‘இவன் தந்திரன்’ பட இயக்குநர் கண்ணீர்!

காட்சிகள் இரத்தா? – ‘இவன் தந்திரன்’ பட இயக்குநர் கண்ணீர்!

863
0
SHARE
Ad

சென்னை – ஜிஎஸ்டி வரி மற்றும் தமிழக அரசு நகராட்சி வரி ஆகியவை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்துத் திரையரங்குகளிலும் காட்சிகள் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ஆர்.கண்ணன் இயக்கத்தில், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘இவன் தந்திரன்’ திரைப்படம் ல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த திடீர் போராட்ட அறிவிப்பை அறிந்து இயக்குநர் ஆர்.கண்ணன் கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார்.

அதில், “படம் வெளியாகி நல்ல விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திடீரென காட்சிகள் இரத்து என அறிவித்தால் எப்படி? வாங்கிய கடன்களை எப்படி அடைப்பது? என்ன செய்வது என்று தெரியவில்லை. விக்ரமன் சார், சேரன் சார், செல்வமணி சார், சமுத்திரக்கனி அண்ணா ஏதாவது பண்ணுங்க. தயவு செய்து உதவுங்க” என்று கண்ணீருடன் கூறியிருக்கிறார்.