Home Featured நாடு ஜுலை 1 முதல் பற்று அட்டைகள், கடன் அட்டைகளுக்கு கையெழுத்து இல்லை!

ஜுலை 1 முதல் பற்று அட்டைகள், கடன் அட்டைகளுக்கு கையெழுத்து இல்லை!

1026
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பற்று அட்டைகள், கடன் அட்டைகள் ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துவதில் இது வரை பின்பற்றப்பட்டு வந்த கையெழுத்து முறை நேற்று ஜூன் 30-ம் தேதியோடு முடிவுக்கு வந்தது.

இன்று ஜூலை 1-ம் தேதி முதல், கடன் அல்லது பற்று அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள் கட்டாயமாக 6 இலக்க தனிநபர் அடையாள எண்ணை (PIN) பயன்படுத்த வேண்டும் என்ற பேங்க் நெகாரா அறிவித்திருக்கிறது.

அட்டைகளைப் பயன்படுத்தும் போது அடையாள எண்களின் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது அடையாள எண்கள் மறந்துவிட்டால் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ளும் படியும் பேங்க் நெகாரா தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice