Home உலகம் “ பேசித்தீர்த்துக்கொள்வோம் ..வாங்களேன் ” அழைக்கிறார் ரப்பானி கர்

“ பேசித்தீர்த்துக்கொள்வோம் ..வாங்களேன் ” அழைக்கிறார் ரப்பானி கர்

908
0
SHARE
Ad

Rabbaniஇஸ்லாமாபாத் – ஜன.17- இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லை பிரச்னை பூதாகாரமாகி வரும் வேளையில் இந்த சூட்டை தணிக்க இரு தரப்பினரும் பேசி தீர்த்துக்கொள்வோமே என இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் (படம்) அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா – பாக்., எல்லையில் இந்திய வீரர்களை கடந்த வாரத்தில் பாகிஸ்தான் படையினர் சுட்டு கொன்றனர். இந்த சம்பவத்தை அடுத்து இரு நாட்டு எல்லையில் பதட்டம் தொற்றியது. இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்த தாக்குதலில் அந்நாட்டு தலிபான் மற்றும் ஜமாஉத்தவா அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவில் ஒரு மாநாட்டில் பங்கேற்று பேசிய ரப்பானி, இந்தியா போருக்கு வழிவகுக்கும் வகையில் நடந்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து நேற்று இரவில் அமெரிக்க நிருபருக்கு அளித்த பேட்டியில் ; எல்லை பகுதியில் அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என ராணுவத்தினரிடம் இரு நாடுகளும் வலியுறுத்தி தெரிவிக்க வேண்டும். மீறல் கூடாது என்பதில் பாகிஸ்தான் முறையாகத்தான் பின்பற்றி வருகிறது.

#TamilSchoolmychoice

கவலைஅளிக்கிறது…

எல்லை பதட்டம் தொடர்பாக ராணுவ தளபதிகள், பிரதமர் மன்மோகன்சிங் பேச்சுக்கள் கவலைஅளிக்கிறது. மீடியாக்களும், அரசியல்வாதிகளும் தேவையற்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது போன்ற தேவையற்ற பேச்சுக்கள் பதட்டத்தை அதிகரிப்பதுடன் எதிர்விளைவையே ஏற்படுத்தும்.

இது போன்ற பதட்டத்தை குறைக்க இரு நாட்டு வெளியுறவு துறை அமைச்சர்கள் பேச்சு நடத்த வேண்டும். சல்மான் குர்ஷீத்தை நான் பேச வருமாறு அழைப்பு விடுக்கிறேன். இது நல்லதொரு முடிவுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு ரப்பானி கூறியுள்ளார்.