Home இந்தியா சமையல் எரிவாயு கொள்கலன் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

சமையல் எரிவாயு கொள்கலன் எண்ணிக்கை 9-ஆக உயர்வு!

1086
0
SHARE
Ad

gas cylinderபுதுடில்லி: ஜன.17-சமையல் எரிவாயு கொள்கலன்களை 6-லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கு (சிலிண்டருக்கு) கட்டுப்பாட்டு  (ரேஷன்) முறை கொண்டு வரப்பட்டது.

இதனால் மானியத்துடன் கூடிய இல்லங்களுக்கான கொள்கலன்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 6-இல் இருந்து  9 ஆக உயர்த்தி இனி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியது. ஆனால் அப்போது குஜராத், இமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் தேர்தல் ஆணையம் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தது.

இந்நிலையில் இப்போது தேர்தல்கள் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 6-லிருந்து 9ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு தேர்தல் கமிஷனும் ஒப்புதல் வழங்கியுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் இந்த புதிய நடைமுறை அமலாகிறது.

#TamilSchoolmychoice

இதே போல், டீசல் விலையையும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.