கோலாலம்பூர் – இவ்வாண்டு 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் அஸ்ட்ரோ ‘நெகராகூ’ பிரச்சாரத்தின் வாயிலாக மறக்கப்பட்ட ஹீரோக்களின் கதைகளுடன் மலேசியர்களின் பல்வேறு கலைக் கலாச்சாரத்தைக் கொண்டாடவிருக்கிறது.
அஸ்ட்ரோவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹென்ட்ரி டான் கூறுகையில், “இன்றைய மலேசியா திருநாட்டை அமைதியான ஒரு நாடாக உருவாக்க பெரும் பங்கு வகித்த நம்முடைய தத்தா, பாட்டி, பெற்றோர்கள், நண்பர்கள் அல்லது யாராவது நன்கு அறிமுகமானவர்களின் கதைகளை அஸ்ட்ரோவின் ‘நெகராகூ’ பிரச்சாரம் வாயிலாக அனைத்து மலேசியர்களிடம் சென்றடைய எண்ணம் கொண்டுள்ளோம். எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி நம் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட சாதாரணமான மலேசியர்களான தாதிகள், சுரங்கத் தொழிலாளர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என மறக்கப்பட்ட ஹீரோக்களைக் கொண்டாடவுள்ளோம்”.
அவ்வகையில், அனைத்து மலேசியர்களும் நாட்டில் எங்கிருந்தாலும் தங்களின் கதையை www.astro.com.my/kitasamahero அகப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அஸ்ட்ரோ வரவேற்கின்றது. மேற்காணும் அகப்பக்கத்தின் இணைப்பில் பன்முகத்தன்மை, விடா முயற்சி, மலேசியாவிற்கான அன்பு உள்ளடக்கிய கதைகள் வெளியிடப்படும்.
இவ்வாண்டு, மலேசியர்கள் 40 புத்தம் புதிய நிகழ்ச்சிகள் மற்றும் 90-க்கும் மேற்பட்ட மலேசிய பின்னணியிலான நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட், அஸ்ட்ரோ கோ மற்றும் (Astro GO மற்றும் NJOI Now)-இல் கண்டு களிக்கலாம். அவ்வகையில் மலேசியாவின் வரலாற்றை கூறும் 6 அத்தியாயங்கள் கொண்ட அனக் மெர்டேகா குறுந்தொடர், 1957 முதல் 1965 வரையான வரலாற்று ஆவணப்படமான ரோட் டு நேஷன்ஹூட் (பாகம் 2), மறக்கப்பட்ட மலேசிய போர்வீரர்களின் கதைக் கூறும் (#theblackhawkdown (Wira Keamanan), Surviving Borneo, Di Puncak Dunia (Extra Ordinary) Malaysian) மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 60 பேரின் வாழ்க்கை பயணத்தின் நேர்காணல்கள் நிகழ்ச்சியான சிக்ஸ்டி (Sixty) ஆகிய நிகழ்ச்சிகளை ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை ஒளிபரப்படும்.
அதுமட்டுமின்றி, அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ‘அபார்ட்மெண்ட்’ மற்றும் ‘குற்றவியல் சட்டத்தின் கீழ்’ தொலைக்காட்சி நாடகங்கள் கண்டு களிக்கலாம். அதை வேளையில், நம் நாட்டின் முன்னணி இசையமையாளர்கள் மற்றும் பாடகர்களின் சிறந்த இசை காணொளிகளின் படைப்புகளுடன் ‘இது நம்ம பாட்டுல’ எனும் இசை கலை நிகழ்ச்சியும் ஒளிபரப்படும்.
மேல் விவரங்களுக்கு www.astro.com.my/kitasamahero அகப்பக்கத்தை நாடுங்கள்.