Home நாடு மலேசிய- சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு 2013

மலேசிய- சிங்கப்பூர் தமிழ் இலக்கிய உறவுப்பால இரண்டாம் மாநாடு 2013

686
0
SHARE
Ad

malaysia-singaporசிங்கப்பூர், மார்ச் 25- கடந்த 2011 ஆம் ஆண்டு மலேசிய –சிங்கப்பூர் இலக்கிய உறவுபால முதலாம் மாநாடு ஜோகூர் மாநிலத் தமிழர் சங்க ஏற்பாட்டில் சிங்கப்பூர் தமிழர் இயக்கங்களுடன் இணைந்து ஜோகூர் டேசாரு கடற்கரை தங்கும் விடுதியில் மிக விமரிசையாக நடந்தது.

இவ்வாண்டு 6.4.2013 இல் சிங்கப்பூரில் உமரு புலவர் தமிழ் நிலையத்தில் ஒருநாள் மாநாடாக நடைபெறவுள்ளது.

ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில் இவ்வாண்டு இளையோர், பெரியோர் என இரு பிரிவினருக்கு ஏற்புடைய தலைப்புகளை மலேசிய சிங்கப்பூர் இணைய ஏற்பாட்டுக் குழுவினர் தேர்வுச் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இளையோருக்கான தலைப்பு

வாழும் தமிழ், அதனை வாழ வைக்கும் அடுத்தலைமுறை என்பதாகும். இத்தலைப்பை மலேசிய நோக்கு மற்றும் சிங்கப்பூர் நோக்கு என இரு நாடுகளைப் பிரதிநிதித்து இளையோர் இருவர் கட்டுரை படைப்பர்.

பெரியோருக்கான தலைப்பு

இலக்கியம் காட்டும் பொருளாதாரமும் அதன் சம காலத்தின் பயன்பாடும் எனும் தலைப்பில் இருவர் தத்தம் நாடுகளைப் பிரதிநிதித்து கட்டுரை படைப்பர்.

பின் குறிப்பு

மாநாட்டுப் பதிவுக்கட்டணம், போக்குவரத்து உட்பட 80 வெள்ளி ரிங்கிட்டை செலுத்த வேண்டும். ஜோகூர் பாருவில் இருந்து பேருந்து 6.4.2013 சனிக்கிழமை  காலை 6 மணிக்குப் புறப்படும். ஒருநாள் நிகழ்வாக நடைபெறும் இம்மாநாட்டில் உணவு வழங்கப்படும். தொடர்ந்து, இரவு விருந்துபசரிப்புக்குப் பிறகு பேருந்து இரவு 10 மணியளவில் ஜோகூர்பாருவை வந்தடையும். முன் பதிவு செய்து கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே மாநாட்டில் கலந்துக் கொள்ள முடியும்

மேல் விவரங்களுக்கு பின் வரும் மலேசிய இணை ஏற்பாட்டுக் குழுவினருடன் தொடர்பு கொள்ளவும்:-

தலைவர் ந.வேணுகோபால் 016-7333 720

பொறுப்பாளர்கள்; இல.வாசுதேவன் 019-7211065   இரா.சேதுபதி,  வி.கே.முருகன்,  க.இரவிச்சந்திரன் 013-7689379