இந்நிகழ்வானது, பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில் , ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றமும், பேரா மாநில அரசு சார இயக்கங்களின் கூட்டமைப்பும் ஒன்றிணைந்து வழங்குகிறது.
இவ்விழாவில் மாநில மந்திரி பெசாரின் இந்தியப் பிரிவுச் சிறப்பு ஆலோசகர் டத்தோ எஸ்.வீரசிங்கம் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு தமிழ்மொழி ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு சாரா இயக்கத்தினர், ஆரம்ப இடைநிலைப்பள்ளிகளின் தமிழாசிரியர்கள், இந்திய மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரை இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
வருகையாளர்களுக்கு சிறப்பு அதிர்ஷ்ட குலுக்களும் பரிசுகளும் உள்ளன.