மலாயா (மலேசியா) மண்ணின் விடுதலைக்கும் தொழிலாளர் உரிமைக்கும் போராடியவர்களில் முதன்மையானவர் மலாயா கணபதி.அடிமைப்பட்டும்,எதிர்த்து கேள்வி கேட்கவும் மாட்டார்கள் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் எண்ணியிருந்த நிலையில் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தை உரிமைக்காக போராட வைத்ததோடு மட்டுமின்றி தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் சுதந்திர உணர்வையும் விதைத்த புரட்சியாளன் இவர். 75ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்நூலின் வாயிலாக மலாயா கணபதி உயிர்பெறுகிறார் – அடுத்தத் தலைமுறைகளுக்காக! இவர் தமிழினத்தின் அடையாளம் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க்த்தின் முகவரி.
வரலாற்றை மீட்போம் – நாளைய தலைமுறைக்கு வரலாற்றை கொண்டு செல்வோம் எனக் குறிப்பிட்டிருக்கும் சிவா லெனினின் ‘மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்)’ நூல் வெளியீடு பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிக அ.சிவநேசன் தலைமையில் கீழ்க்காணுமாறு வெளியீடு காணவுள்ளது:
நாள் : 14.12.2024, சனிக்கிழமை
நேரம் : 3.00pm
இடம் : சுங்கை
தமிழ்ப்பள்ளி
மண்டபம்
அனைவரும் திரளாக கலந்து சிறப்பிக்க ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றார்கள்.