Home உலகம் மெஸ்ஸி அடித்த கோல்கள் – அர்ஜெண்டினா இறுதிச் சுற்றுக்குத் தகுதி

மெஸ்ஸி அடித்த கோல்கள் – அர்ஜெண்டினா இறுதிச் சுற்றுக்குத் தகுதி

719
0
SHARE
Ad

FIFA-argentina-team-messiகுயித்தோ (இக்குவேடோர்) – அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 2018 உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் இன்று புதன்கிழமை தென் அமெரிக்காவின் இக்குவேடோர் நாட்டுடன் மோதிய அர்ஜெண்டினா 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய விளையாட்டின் 3 வெற்றி கோல்களையும் அர்ஜெண்டினாவின் முன்னணி ஆட்டக்காரர் லியோனல் மெஸ்ஸி அடித்து சாதனை புரிந்தார். இதனைத் தொடர்ந்து அர்ஜெண்டினா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

அதே வேளையில் கொலம்பியா, பனாமா, உருகுவே ஆகிய நாடுகளும் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.