Home நாடு நஜிப் தளத்தில் அஸ்மின் அலி புன்னகைக்கும் படம்!

நஜிப் தளத்தில் அஸ்மின் அலி புன்னகைக்கும் படம்!

831
0
SHARE
Ad

najib-azmin-conf rulers-12102017கோலாலம்பூர் – சமூக வலைத் தளங்களில் அடிக்கடி தனது பதிவுகளை வெளியிடும் வழக்கம் உள்ளவர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். நேற்று வியாழக்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் படம் ஒன்றை வெளியிட்டிருப்பது, பல்வேறு ஆரூடங்களைக் கிளப்பியிருக்கிறது.

கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களின் கூட்டத்தின் இடைவேளையின்போது நஜிப் – அஸ்மின் அலி இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

மேற்கண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதனுடன் ஒரு கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் நஜிப். “அந்த சிரிப்புக்கு அர்த்தம் இருக்கிறது” (Senyum ada makna tu) என்பதுதான் நஜிப்பின் பதிவு.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து, நஜிப் வெளியிட்ட புகைப்படத்தை மீண்டும் தனது டுவிட்டர் மறுபதிவிட்ட அஸ்மின், ஒரு பழைய ஆங்கிலக் கவிதையின் சில வரிகளைத் தேர்ந்தெடுத்து பின்வருமாறு கருத்து பதிவிட்டிருக்கிறார்:

“புன்னகை செய்யுங்கள். அழுவதால் ஆகப் போகும் பயன் என்ன?

நடவடிக்கை எடுங்கள். பார்த்துக் கொண்டே இருப்பதில் என்ன பயன்?”

azmin-twitterநஜிப்-அஸ்மின் அலி இடையிலான இந்த சமூக வலைத்தள கருத்துப் பரிமாற்றங்கள் ஊடகங்களையும் ஈர்த்துள்ளன.