‘ஒளி’, ‘உணர்வு’ ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த நோவா ரிபுன் டத்தோ என்.கே.சுந்தரம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்ளும் கணிதப் பேராசிரியர் மதுசூதனன், அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும், தந்தை, மகளிடையிலான பாசப்போராட்டத்தையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.புவனேந்திரன்.
அதற்கேற்ப ஹரிதாசின் நடிப்பும் மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. பல காட்சிகளில் தனது சிறந்த நடிப்பால் கண்கலங்க வைத்துவிடுகிறார்.
மேலும், இத்திரைப்படத்தில் சசிதரன், சீலன், சரேஸ் டி செவன், மூன் நிலா, புஷ்பா நாராயண் எனப் பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பாடல்களை பாலன்ராஜ் – ஜெகதீஸ், ஜித்திஸ், ஜெயா ஈஸ்வர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர்.