Home வணிகம்/தொழில் நுட்பம் 4ஆவது மலேசிய அனைத்துலக காலணி விழா 2013

4ஆவது மலேசிய அனைத்துலக காலணி விழா 2013

587
0
SHARE
Ad

shoe

கோலாலம்பூர், மார்ச் 26- எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி  மார்ச் 31 ஆம் தேதி வரை, கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையம் அரங்கம் 2இல், 4ஆவது மலேசிய அனைத்துலக காலணி விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழா காலை  10.30 மணி முதல் இரவு  8.30 மணி வரை நிகழவுள்ளது.

இந்நிகழ்வில், பேராசிரியர் டத்தோ டாக்டர் ஜிம்மி சூவின் காலணி வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதோடு அவரது கையொப்பத்தையும் (ஆட்டோகிராப்) பெறலாம்.

#TamilSchoolmychoice

மேலும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக வடிவமைப்பாளர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் தயாரிப்புகளைப் பார்வையிடுவதோடு கற்பனை திறன் மிகுந்த வடிவமைப்பாளர்களின் தயாரிப்புகளையும் கண்டுக் களிக்கலாம்.

இந்நிகழ்வுக்கு, 150க்கும்  மேற்பட்ட வித விதமான காலணி வகைகளில் உங்களுக்கு பிடித்தமானவற்றை தேர்வு செய்யலாம். இலவச கால்கள் பரிசோதனை மற்றும் கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் ஆகியவற்றை பெற்று பயன் பெறலாம்.

முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.