Home நாடு மறைந்த பா.அ. சிவத்திற்கு நினைவாஞ்சலி

மறைந்த பா.அ. சிவத்திற்கு நினைவாஞ்சலி

649
0
SHARE
Ad

sivam-sliderகோலாலம்பூர், மார்ச் 26 –  இலக்கியவாதியும், நாட்டின் இளைய, புதிய தலைமுறை எழுத்தாளர்களில் தனிமுத்திரை பதித்தவருமான மறைந்த பா.அ. சிவத்தின் நினைவாஞ்சலிக் கூட்டம் எதிர்வரும் 31.3.2013 (ஞாயிறு) தலைநகரில் நடைபெறவிருக்கிறது.

மனிதவள அமைச்சரின் பத்திரிக்கைச் செயலாளராகப் பணியாற்றிய சிவத்தின் நினைவாஞ்சலிக் கூட்டம்,மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.  மொழி, இலக்கியம்,அரசியல், சமூக இயக்கங்களின் ஆதரவில் தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் காலை 10 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறும்.

மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத்துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தலைமை தாங்கும் இந்நிகழ்ச்சியில், டாக்டர் சண்முக சிவா, எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ, இராஜேந்திரன், தொலைக்காட்சித் தமிழ் பிரிவுத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் சிவத்தின் படைப்பிலக்கிய நண்பர் நவின் ஆகியோர், சிவத்துடனான  தங்கள் நினைவுகளை பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

பா.அ. சிவம் பற்றிய சிறப்புச் செய்திப்படமும், ஜாசின் தேவராஜனின் கவிதையும் இந்த நிகழ்வில்  இடம்பெறும். மலர் அஞ்சலியோடு நிறைவுபெறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு பொதுமக்களையும், நண்பர்களையும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.