Home நாடு “லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன்” – நூருல் இசா தகவல்!

“லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன்” – நூருல் இசா தகவல்!

885
0
SHARE
Ad

Nurul izzah anwarகோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் பிகேஆர் உதவித் தலைவரான நூருல் இசா அன்வார், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் போட்டிடக்கூடும் என ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தான் மீண்டும் லெம்பா பந்தாய் தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக நூருல் இசா அறிவித்திருக்கிறார்.

எனினும், கட்சியின் முடிவை, தான் பின்பற்றுவேன் என்றும் நூருல் இசா குறிப்பிட்டிருக்கிறார்.

“நிறைய ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. அதற்கு முடிவே கிடையாது. நான் லெம்பா பந்தாயில் தான் போட்டியிடுவேன் என உறுதிபடுத்திக் கொள்கிறேன். எனினும், தலைமைத்துவம் தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் போராடும் வீரர்கள் மட்டுமே” என்று நூருல் நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், லெம்பா பந்தாய் தொகுதியில் அம்னோ வேட்பாளர் ராஜா நோங் சிக் பின் ராஜா சைனல் அபிடினை எதிர்த்துப் போட்டியிட்ட நூருல் இசா, மொத்தம் 31,008 வாக்குகள் பெற்று, 1,847 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.