Home நாடு அன்வார் இப்ராகிம் பேட்டியுடன் தொடங்கியது புதிய மலேசிய வானொலி (Radio Free Malaysia)

அன்வார் இப்ராகிம் பேட்டியுடன் தொடங்கியது புதிய மலேசிய வானொலி (Radio Free Malaysia)

447
0
SHARE
Ad

radio-station-microphone

கோலாலம்பூர்,மார்ச் 28 – மலேசியாவில் புதிய சார்பற்ற வானொலி நிலையம் ஒன்று கடந்த திங்கட்கிழமை முதல் வெற்றிகரமாக அதன் சேவையைத் தொடங்கியுள்ளது. இதில் சிறப்பம்சமாக எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் பிரத்யேக பேட்டியை தனது முதல் நிகழ்ச்சியாக ஒலிபரப்பியுள்ளது.

இதுவரை மலேசிய வானொலி நிலையங்கள் அனைத்தும் ஆளும் கட்சிக்குச் சாதகமாக செயல்பட்டு வந்த நிலையில், புதிய அவதாரம் எடுத்துள்ள இந்த சுதந்திர வானொலி நிலையம் எந்த ஒரு அரசியல் தலையீடும் இன்றி தனிப்பட்ட முறையில் செயல்பட்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் அனைத்தையும் அலசி ஆராயவுள்ளது.

#TamilSchoolmychoice

மலேசிய சுதந்திர வானொலி (Radio Free Malaysia) என்று அழைக்கப்படும் லண்டனைச் சேர்ந்த இந்த வானொலி நிலையம், ஏற்கனவே மலேசியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் சரவாக் சுதந்திர வானொலி நிலையத்தின் பங்குதாரர் ஆகும். எனவே இவ்வானொலிச் சேவை (MW) 1,359kHz என்ற அலைவரிசையில், மலேசிய நேரப்படி தினமும் இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதன் ஒலிபரப்பைத் தொடரும்.

இது தொடர்பாக இவ்வானொலி நிலையத்தின் நிறுவனர் கிளேர் ரியுகேஸ்டில் பிரவுன் கூறுகையில்,

“மலேசிய சுதந்திர வானொலியில் தினமும் இரண்டு மணிநேரம் நாட்டின் அரசியல் மற்றும் சமூக நலன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளது.இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க  தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசியல் தடைகளும் இன்றி சுதந்திரமான முறையில் இவ்வானொலி நிலையம் செயல்படவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.