
புத்ரா ஜெயா – நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் ஷாரிப் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி சுல்கிப்ளி அகமட் மகினுடின் இருவரும் பதவி விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் தங்களின் பதவி விலகல் கடிதங்களை மாமன்னரிடம் கடந்த ஜூன் 7-ஆம் தேதி சமர்ப்பித்து விட்டதாக கூட்டரசு நீதிமன்றத்தின் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அவர்களின் பதவி விலகல் எதிர்வரும் ஜூலை 31 முதல் அமுலுக்கு வரும். அதற்கு முன்பாக அவர்களுக்குப் பதிலாக புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.