Home இந்தியா கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி காணொளியை வெளியிட்டார் மோடி!

கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி காணொளியை வெளியிட்டார் மோடி!

1109
0
SHARE
Ad

புதுடெல்லி – கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் காணொளியை டுவிட்டரில் வெளியிட்டார்.

சுமார் 1.48 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டு மோடி கூறியுள்ளதாவது:

“காலை உடற்பயிற்சியில் சில அம்சங்களை வெளியிட்டுள்ளேன். யோகாவை தவிர்த்து, இயற்கையின் ஐந்து தத்துவங்களான ஆகாயம், நீர், நிலம், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்கிறேன்.
இது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. இதனுடன், மூச்சு பயிற்சியையும் மேற்கொள்கிறேன்” என மோடி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, டேபிள் டென்னிஸ் வீராங்கணை மணிகா பத்ராவு மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட துணிச்சலான ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு உடற்பயிற்சி குறித்த சவாலையும் மோடி அறிவித்திருக்கிறார்.