கோலாலம்பூர் – நிதியமைச்சின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 12) நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக அமுலுக்கு வருகிறது.
58 வயதான இஸ்மாயில் பக்கார் உலக வங்கியின் முன்னாள் ஆலோசகருமாவார். டான்ஸ்ரீ முகமட் இர்வான் செரிகார் அப்துல்லாவிடமிருந்து இஸ்மாயில் இந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.
இர்வான் செரிகார் நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொதுச் சேவைத் துறைக்கு மாற்றப்பட்டிருந்தார். நாளை வியாழக்கிழமை (ஜூன் 14) அவருடைய பதவிக்கான ஒப்பந்தக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது.
இஸ்மாயில் 32 ஆண்டுகள் அரசாங்கத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். நிதி அமைச்சின் வரவு செலவு திட்டத்தின் (பட்ஜெட்) இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.
இதற்கு முன் வேறு சில அமைச்சுகளிலும் அவர் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார்.