Home தேர்தல்-14 நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் இடமாற்றம்

நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகார் இடமாற்றம்

1052
0
SHARE
Ad
முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா

புத்ரா ஜெயா – நிதி அமைச்சின் தலைமைச் செயலாளரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நெருக்கமான சகாக்களில் ஒருவராகக் கருதப்பட்டவருமான முகமட் இர்வான் செரிகார் அப்துல்லா, நிதியமைச்சின் தலைமைச் செயலாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இனி நிதி அமைச்சின் எந்தவிதப் பணிகளையும் அவர் மேற்கொள்ள மாட்டார். மாறாக பொதுச் சேவைத் துறைக்கு இன்று முதல் மாற்றப்பட்டிருக்கும் இர்வான் எதிர்வரும் ஜூன் 13-ஆம் தேதி வரை அங்கு பணி புரிவார். அதன் பின்னர் அவர் பதவி ஓய்வு பெறுகிறார்.

அரசாங்க சேவையிலிருந்து இர்வான் ஓய்வு பெற்று விட்டாலும், ஒப்பந்த அடிப்படையில் அவரது பணிக் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. எதிர்வரும் 19 மார்ச் 2019 வரை அவரது ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்போது அவரது ஒப்பந்த காலம் உடனடியாகக் குறைக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஜூன் 14 வரை மட்டுமே அவரது பதவிக்காலத்தின் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ அலி அம்சா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

முகமட் இர்வான், 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவருமாவார்.

மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் கண்காணிப்புக் குழுத் தலைவராகவும் இர்வான் நியமிக்கப்பட்டிருந்தார்.