Home உலகம் கம்போடியா அங்கோர் வாட்டில் ‘உலகத் தமிழர் மாநாடு’

கம்போடியா அங்கோர் வாட்டில் ‘உலகத் தமிழர் மாநாடு’

2194
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கம்போடியாவின் புகழ்பெற்ற வரலாற்றுத் தலமான அங்கோர் வாட் வளாகத்தில் ‘உலகத் தமிழர் மாநாடு’ எதிர்வரும் மே 18 மற்றும் 19 ஆகிய இருநாட்களுக்கு நடைபெறவிருக்கின்றது. இந்தத் தகவலை கோலாலம்பூரில் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மலாயாப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரான மன்னர் மன்னன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக பிரபல தமிழறிஞர் ஒரிசா பாலு செயல்படுகிறார்.

உலகத் தமிழர் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் மன்னர் மன்னன் (நடுவில்)

இந்த மாநாட்டில் அனைத்துலக அளவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தமிழர் பாரம்பரியங்கள் பெருமளவில் பதிந்திருக்கும் பகுதிகளில் அங்கோர் வாட்டும் ஒன்று. எனவே, உலகத் தமிழர் மாநாடு அங்கு நடைபெற்று, தமிழர்கள் பண்டைய கலை, கலாச்சார தொன்மைகள் குறித்த ஆய்வுகளும், உரைகளும் இந்த மாநாட்டில் இடம் பெறும்.

தமிழர்களின் பழம் பெருமைகளையும் இந்த தமிழர் மாநாடு எடுத்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

தென்புலத்தார் பன்னாட்டுத் தமிழர் கூட்டமைப்பின் நிறுவனர் ஒரிசா பாலுவின் தொடக்க முயற்சியாலும், மற்ற தமிழ் அமைப்புகளான கம்போடியா தமிழர் பேரவை, தென்கிழக்காசியத் தமிழ்ச் சங்கம் ‘கோட்டோ’ எனப்படும் தமிழ் வம்சாவளியினரின் உலக அமைப்பு, மற்றும் உலகத் தமிழ் இளைஞர் அமைப்பு போன்ற அமைப்புகளின் கூட்டு முயற்சியோடும் இந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிலே கம்போடியாவின் ‘சியாம் ரீப்’  தென்கிழக்காசியப் பல்கலைக் கழகத்தில், தமிழ் நாட்டிலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தோடு இணைந்து, தமிழுக்கான இருக்கை அமைப்பதற்கென ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட விழா மலர் ஒன்றும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும்.

இந்த மாநாடு குறித்த மேல்விவரங்கள் பெற விரும்புவோர் இதன் ஒருங்கிணைப்பாளர்களை கீழ்க்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்:

ஒருங்கிணைப்பாளர்கள்:

1) ஒரிசா பாலு +919940240847

2) சீனிவாச ராவ் +855969296456

3) ஜானசேகரன் +918870806789

4) திருத்தணிகாசலம் +919884612351