Home தேர்தல்-14 மரபுகளை மீறி மகாதீரைக் காணவந்த புருணை சுல்தான்

மரபுகளை மீறி மகாதீரைக் காணவந்த புருணை சுல்தான்

2527
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – பிரதமராகப் பதவியேற்ற துன் மகாதீர் இன்று திங்கட்கிழமை முதல் நாளாக தன் அலுவல்களைத் தொடக்கிய நிலையில், அவரைக் காணவந்த முதல் அயல் நாட்டுத் தலைவராக புருணையின் சுல்தான் ஹசனால் போல்கியா திகழ்கிறார்.

புருணையின் அரசாங்கத் தலைவர் என்பது மட்டுமின்றி, அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான புருணை சுல்தான், அனைத்து தூதரக மரபுகளையும் மீறி, இன்று மகாதீர் அலுவல் தொடங்கிய முதல் நாளே பறந்து வந்து அவரைச் சந்தித்தார்.

புருணை சுல்தானுடன் அவரது மகன் படுக்கா ஸ்ரீ பெங்கிரான் மூடா அப்துல் மதீன் – உடன் வந்தார்.

#TamilSchoolmychoice

துன் மகாதீரும் அவரை வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்று சந்திப்பு நடத்தினார்.

மரபுகளை மீறி தனக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு நேரடியாக புருணையிலிருந்து பறந்து வந்த புருணை சுல்தானுக்கு மகாதீர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.