Home தேர்தல்-14 ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பதவி விலகினார்

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் பதவி விலகினார்

1069
0
SHARE
Ad
ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவர் என எதிர்பார்க்கப்படும் அபு காசிம்

புத்ரா ஜெயா – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அகமட் பதவி விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை 52 வயதான அவர் அரசாங்கத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைமை ஆணையர் நாளை செவ்வாய்க்கிழமை நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர், டான்ஸ்ரீ அபு காசிம் முகமட் மீண்டும் அந்த ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்படலாம் என ஆரூடங்கள் எழுந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டில் 1எம்டிபி விவகாரத்தை விசாரிக்க அபு காசிம் முற்பட்டதால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அதற்குப் பதிலாக சுல்கிப்ளி அகமட் நியமிக்கப்பட்டார்.