இன்று காலை பிரதமராகத் தனது முதல் நாள் பணிகளை அலுவலகத்தில் தொடக்கிய மகாதீர் முதல் கட்டமாக அனைத்து அமைச்சுகளின் தலைமைச் செயலாளர்களுடனும் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அந்தச் சந்திப்புக் கூட்டத்தின் போது, தலைமைச் செயலாளர்களுக்கு விடுத்த உத்தரவுகளில் முதன்மையானது, யாரும் எந்த ஆவணத்தையும் அலுவலகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்லக் கூடாது அல்லது அரசாங்க அனுமதியில்லாமல் எந்த ஆவணத்தையும் அழிக்கக் கூடாது என்பதாகும்.
Comments