Home தேர்தல்-14 அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?

அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அம்பிகாவா?

1258
0
SHARE
Ad
அம்பிகா சீனிவாசன்

புத்ரா ஜெயா – அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்று திங்கட்கிழமை வழக்கம்போல் பணிக்குத் திரும்பியிருக்கிறார்.

தனது அலுவலகத்தில் அரசாங்கத்தின் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் அவர் மறுத்தார்.

இதற்கிடையில் இன்று பிற்பகலில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்திய பிரதமர் துன் மகாதீர் தலைமை வழக்கறிஞர் விரும்பினால், விடுமுறையில் செல்லலாம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

தலைமை வழக்கறிஞர் ஏதாவது ஒரு வகையில் நீக்கப்படுவது உறுதியாகிவிட்ட நிலையில் அடுத்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் யார் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக இருப்பவர் பொதுவானவராகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற அறைகூவல்களும் விடுக்கப்பட்டு வருகின்றன.

வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரான அம்பிகா சீனிவாசன் அடுத்த தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் ஜோர்ஜ் வர்கீஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அம்பிகா அரசாங்கத் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்படுவதன் மூலம் அந்த அலுவலகத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்பட முடியும் என்றும் ஜோர்ஜ் வர்கீஸ் தெரிவித்தார்.

அம்பிகா அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது முழு ஆதரவை வழங்கும் என்றும் வர்கீஸ் கூறினார்.