Home Video தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது

தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி 2024 – புதிய வடிவத்தில் நடத்தப்படுகிறது

496
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு புதிய வடிவத்தில் மீண்டும் இந்த ஆண்டும் நடத்தப்படுகிறது. சக்சஸ் பாத்வே அகாடமி (Success Pathway Academy) என்னும் நிறுவனம் இந்தப் போட்டியை நடத்துகிறது. தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி குறித்த விவரங்களும் போட்டியின் புதிய வடிவம் குறித்த விளக்கமும், இன்று புதன்கிழமை ஜூன் 26-ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு யூடியூப் தளத்தின் வழி வெளியிடப்பட்டது.

அந்த விளக்க நிகழ்ச்சியில் மலேசியக் கணிஞர், முரசு சிஸ்டம்ஸ் நிறுவனத் தலைவர் முத்து நெடுமாறன், உத்தமம் என்னும் உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் மலேசியக் கிளையின் தலைவரும் மலாயாப் பல்கலைக் கழக விரிவுரையாளருமான இளந்தமிழ், ஓம்தமிழ் நிறுவனத்தின் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கங்கள் வழங்கினர்.

“மின்னியல் யுகத்தில் தமிழ்: மொழியையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் பாலம்” என்ற கருப்பொருளின் கீழ், இன்றைய விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

தமிழ் மொழிக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கும் இடையேயான தொடர்பை, மேற்குறிப்பிட்ட நிபுணர்கள் குழு விவாதித்தது. சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விளக்கங்கள் தரப்பட்டன. மின்னியல் யுகத்தில் தமிழ் வளர்ந்து வருவது குறித்தும் தமிழின் பங்ளிப்பையும் முன்னிலைப்படுத்தி பங்கேற்பாளர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். இன்றைய யூடியூப் காணொலியில் கீழ்க்காணும் அம்சங்களும் விவாதிக்கப்பட்டன:

  1. துறை நிபுணர்களின் நுண்ணறிவுகள்
  2. ஊடாடும் கேள்வி-பதில் அமர்வு
  3. தமிழ் மொழி ஆர்வலர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளைப் பற்றிய பார்வை

மின்னியல் யுகத்தில் தமிழ் மொழியை ஊக்குவிப்பதில் தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி ஒரு முக்கியமான வளர்ச்சிப் படியாகக் கருதப்படுகிறது.

பாரம்பரிய மொழிப் போட்டிகளை நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் தொடர் முயற்சிகளையும் இந்தப் போட்டி எடுத்துக்காட்டும்.

தேசிய தமிழ் எழுத்துக்கூட்டல் போட்டி குறித்த விளக்கங்களை கீழ்க்காணும் யூடியூப் தளத்தின் இணைப்பில் காணலாம்: