
கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய பெல்டா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் தனது பதவி விலகல் கடிததத்தை சமர்ப்பித்துள்ளார்.
கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்தினால் இந்தப் பதவிக்குத் தான் நியமிக்கப்பட்டதால், புதிய அரசாங்கம் பதவியேற்றிருக்கும் நிலையில் தான் பதவி விலகுவதுதான் பொருத்தம் என்றும் ஷாரிர் கூறியிருக்கிறார்.
டான்ஸ்ரீ இசா சமாட்டிடம் இருந்து 2017 ஜனவரி மாதத்தில் பெல்டா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஷாரிர் அந்த சமயத்தில் ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
எனினும் மே 9 பொதுத் தேர்தலில் ஜோகூர் பாரு தொகுதியில் 19,782 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் வேட்பாளர் அக்மல் நசீர், ஷாரிர் சமாட்டைத் தோற்கடித்தார்.